×

ஊட்டி தீயணைப்புத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி


ஊட்டி, அக். 22:  கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாள் தோறும் தீயணைப்புத்துறை ஊழியர்கள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி தீயணைப்புத்துறையினர் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நேற்று ஊட்டியில் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி இரு சக்கர வாகனத்தில் சென்றனர். லோயர் பஜார், கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதியில் இந்த பேரணி நிறைவடைந்தது. பேரணியின்போது கொரோனா ஏற்படும் முறைகள், அதனை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்து பிரசாரங்களை மேற்கொண்டனர்.

Tags : Corona Awareness Two Wheeler Rally ,Ooty Fire Department ,
× RELATED காங். சார்பில் ஏர் கலப்பை யாத்திரை