ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளை வடமாநில வாலிபர்கள் 8 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

கோவை,அக்.22: கோவையில் ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள் 8 பேருக்கு கோவை நீதிமற்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கோவை அவிநாசி ரோடு மற்றும் பீளமேடு தண்ணீர்பந்தல் ஆகிய பகுதிகளில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி 3 வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து  போலீசார் தனிப்படை அமைத்து  நடத்திய விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரியானாவை சேர்ந்த இஸ்லாமுதீன்(43), மத்திய பிரதேசத்தைச சேர்ந்த முஸ்தாக்(33), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஜூல்பிகர்(25),  மௌசம் கான்(30), ஜூபேர்(29), அமீத்குமார்(25), சல்மான்(30), அமீன்(34), சுபேர்(34) ஆகிய 9பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவர்கள் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதில் இஸ்லாமுதீன்  வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ஹரியானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகையால்  இஸ்லாமுதீனை தவிர மற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் முடிந்த நிலையில், இவர்கள்  மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி ஞானசம்மந்தம்  கொள்ளையர்களுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம்  அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தார்.

Related Stories: