கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து மண்டல உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம்

கோவை, அக்.22:  அனைத்து மண்டல உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கோவை  மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி தலைமை தாங்கினார். இந்த ஆய்வுகூட்டத்தில் துணை கமிஷ்னர் மதுராந்தகி பேசுகையில், ‘‘தனிக்கைத் துறையினர் ஆட்சேபனை செய்த அனுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் பதில் அளிக்க வேண்டும். பண்டிகைக்காலம் நெருங்குவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா நோய் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்டறிய பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கொரோனா நோய் தடுப்பு விதிகளை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் அதே விதிமீறல் இருந்தால், பூட்டி சீல் வைக்க வேண்டும். வரிவிதிப்பு தொடர்பான மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: