பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

ஈரோடு, அக். 22:  தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு, தனிதேர்வர்களுக்கான பொதுதேர்வு கடந்த மாதம் துவங்கியது. இதில், பிளஸ் 2 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி துவங்கி, 28ம் தேதி நிறைவு பெற்றது. இதேபோல் பிளஸ் 1 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்கி கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையங்கள் அமைக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்ட மையங்களில் 9 ஆயிரத்து 450 பிளஸ் 2 விடைத்தாள்களும், 5 ஆயிரத்து 800 பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது.

  இதையடுத்து பாட வாரியாக மதிப்பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, சென்னை பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>