கள் விற்றவர் கைது

ஈரோடு, அக். 22: ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் பனைமரத்துகாட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து கடம்பூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த கடம்பூர் தொண்டூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (51) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 லிட்டர் தென்னங்கள்ளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>