×

வீட்டில் நுழைந்து நகை கொள்ளை: அரைகிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த செம்பாக்கம், சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (47). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி காவேரி. நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கினர். நேற்று அதிகாலை 3 மணியளவில் காவேரி, தனது கணவரை எழுப்பி வீட்டின் பின்பக்க கதவு திறந்துள்ளதாக கூறினார். அவர் சென்று பார்த்தபோது, பின்பக்க கிரில் கதவு உடைத்து, உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், அரைகிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தவேளையில், நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம்: வடக்கு மாமல்லபுரத்தில் கங்கையம்மன் கோயில் உள்ளது. வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயிலுக்குள் உண்டியல் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது கோயில் கிரில் கேட் உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலை உடைத்து, மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED வீட்டை உடைத்து கொள்ளை