×

வீட்டில் பாடம் நடத்துவதாக கூறி மாணவனுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பாலூர் மேலசேரியை சேர்ந்தவர் கார்த்திக் (26), காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா. இவருக்கு சரத் (14) உள்பட 2 மகன்கள் உள்ளனர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
கணவரை இழந்த காஞ்சனா, சமையல் வேலை செய்கிறார். சரத், செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான்.
கொரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதையொட்டி சரத், சரிவர படிக்க முடியாமல் சிரமம் அடைந்தான். இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் காஞ்சனாவின் வீட்டுக்கு சென்ற கார்த்திக், ‘‘உங்களது மகனை எனது வீட்டுக்கு அனுப்புங்கள். அங்கு அவனுக்கு பாடம் நடத்துகிறேன்’’ என கூறியுள்ளார். அதன்படி அவரும், மகனை அனுப்பியுள்ளார்.

ஆனால் கார்த்திக், சிறுவனுக்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக தொல்லை கொடுத்துள்ளார். அதை தனது செல்போனிலும் பதிவு செய்து, அதை காட்டி மிரட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவனிடம், தாய் விசாரித்துள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை அவன் கூறினான். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர், கார்த்திக் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர், குளியலறையில் இருந்தார். இதையடுத்து, அங்கிருந்த அவரது செல்போனில் பதிவான காட்சிகளை தனது செல்போனுக்கு மாற்றிவிட்டு, கார்த்திக்கின் செல்போன் காட்சிகளை அழித்து விட்டு திரும்பினார்.
மேலும், இதுகுறித்து பாலூர் போலீசில், வீடியோ காட்சிகளுடன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி ஆசிரியர் கார்த்திக்கை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sexual harassment ,student ,Private school teacher ,
× RELATED வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டாக்டர் உள்பட 2 பேர் கைது