×

திருமணமான ஒரு மாதத்தில் மனைவி சாவு: துக்கம் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் குப்பத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (30). மீனவர். இவருக்கும் தென்பட்டினம் குப்பத்தை சேர்ந்த ராணி (எ) நந்தினி (25) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணமானது. கடந்த 8ம் தேதி காலை  ஜெயப்பிரகாஷ்  வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மதியம் அவர் வீடு திரும்பியபோது, ராணி மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில், நேற்று காலை ஜெயப்பிரகாஷ், காலை கல்பாக்கம்  மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து, கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : suicide ,
× RELATED குடியாத்தம் அருகே சோகம் ஜாமீனில் வந்த...