×

லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி

குலசேகரம், அக்.21: திருவட்டார் இட்டகவேலி கிறிஸ்டியன் காலனியை சேர்ந்தவர் ஆபகூக் என்ற அப்போஸ்தலர் (61). தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான பைக்கில் நேற்றுமுன்தினம் மாலை திருவட்டாரில் இருந்து வீட்டிற்கு சென்றார். புத்தன்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது லாரியின் பக்கவாட்டில் உரசி பைக் கட்டுப்பாட்டை இழந்து சரிந்துள்ளது. இதில் கீழே விழுந்த அவர் லாரியின் பின் பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் ஆபகூக் என்ற அப்போஸ்தலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து அவரது மகன் சுரேஷ்  அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி