×

லாரி மீது ஷேர் ஆட்டோ மோதி 2 பெண்கள் பலி

வானூர், அக். 21: வானூர் தாலுகா கிளியனூர் அண்ணா நகரை சேர்ந்த 13 பெண்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். தற்போது பேருந்து ஓடாததால் ஷேர் ஆட்டோ மூலம் வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று பாப்பாஞ்சாவடி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனர் ஐயப்பன் (20) என்பவர் 13 பெண்களை வேலை முடிந்து ஷேர் ஆட்டோவில் கிளியனூருக்கு அழைத்து சென்றார். தைலாபுரம் அருகே ஒரு தனியார் ஓட்டல் பகுதியில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் டிரைவர் உள்பட 14பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அங்காளபரமேஸ்வரி (14), ஞானவல்லி (22) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்ற 12 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

Tags :
× RELATED ஆவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு...