வேளாண் விரிவாக்க மைய கட்டுமான பணி துவக்கம்

இடைப்பாடி, அக்.21: இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ₹2 கோடி மதிப்பில் புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பூமி பூஜையுடன் கட்டுமான பணி துவங்கியது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவரும், ஆத்மா திட்டக்குழு தலைவருமான கரட்டூர் மணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், வேளாண் உதவி இயக்குனர் ராதா ருக்மணி, வேளாண் உதவி பொறியாளர் ரவீந்திரநாத் தாகூர், தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி, கூட்டுறவு சங்க தலைவர்கள் பிரேம்சந்தர், மாணிக்கம், துணைத்தலைவர் ரவி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் வைத்திலிங்கம், முருகன், கவுன்சிலர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>