×

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில்

செய்யாறு, அக்.21: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், முதலாமாண்டு பாடப்பிரிவுகளில் காலியிடங்களுக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.ஆல்பிரட்சேவியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு (2020-21) அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னியல் மற்றும் தொடர்பியல், கணினியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாகவும், பிற மாணவர்கள் ₹150 கட்டணம் செலுத்தியும் விண்ணப்பங்களை கல்லூரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்குள் வந்து சேர வேண்டும். 3ம் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு வரும் 28ம் தேதி காலை 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். மேலும், விவரங்களுக்கு 04182- 224275 என்ற தொலைபேசி எண்ணில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்