×

போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

கே.வி.குப்பம் அக்.21: குடியாத்தம் ஆர்எஸ் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(23). இவர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி இரவு கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் மலையடிவாரத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சசிகுமார் உள்ளிட்ட 3 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் சசிகுமாரை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் காயமடைந்த சசிகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து அதே பகுதியை சேர்ந்த கண்டியான்(36) யுவராஜ்(30), துரைமூலை பகுதியை சேர்ந்த சந்துரு(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை தேடி வந்தனர்.  இந்நிலையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இந்த வழக்கு ெதாடர்பாக காங்குப்பம் பகுதியை சேர்ந்த தயாளன் மகன் ரவீந்திரராஜ்(25) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED போக்சோவில் வாலிபர் கைது