×

திண்டுக்கல் குடகனாறு தண்ணீர் பங்கீட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

திண்டுக்கல், அக்.21: குடகனாறு நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, ஐ.பெரியசாமி எம்எல்ஏ உறுதியளித்துள்ளார். திண்டுக்கல்லில் திமுக கட்சி அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் ஆளும் அதிமுக அரசு தவிர்த்து வருகிறது. இருந்தபோதிலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பிரதானமான குடகனாறு நீர் பங்கீட்டு பிரச்சனை, முத்தரப்பு விவசாயிகளின் நலனுக்காகவும், பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்காகவும் முழுவீச்சில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கன்னிமார்கோவில் அருகே நரசிங்கபுரம் தெற்கு பகுதியில் ஆத்தூர் ராஜவாய்க்காலுக்கும், குடகனாறுக்கும் தண்ணீர் செல்வதற்காக கற்களை வைத்து அணை போன்ற ஒரு அமைப்பை அந்தக் காலத்தில் செய்திருந்தனர். அந்த கற்களால் ஆன அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிமெண்ட் கான்கிரீட் மூலம் அடைத்ததால் தற்போது தண்ணீர் பகிர்வதில் முத்தரப்பு விவசாயிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதன் விளைவாக மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, தண்ணீர் பகிர்வதில் பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்து முத்தரப்பு விவசாயிகளிடமும் கருத்துக்களை கேட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. மாவட்ட கலெக்டர் அந்த அறிக்கையை முதலமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று பருவமழை துவங்குவதற்கு முன் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பார்.     

ஐ.பெரியசாமி உறுதி
திண்டுக்கல்லில் திமுக கட்சி அலுவலகத்தில் பேட்டியளித்த ஐ.பெரியசாமி. ‘இன்சூரன்ஸ் பெற்று தருவதாக ஆள் சேர்க்கும் பாஜக’  ஐ.பெரியசாமி மேலும் கூறுகையில், ‘‘திமுகவிற்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற சிறிய நோக்கத்தில் பாஜக அரசியல் ஆதாயத்திற்காக போராட்டம் நடத்துகிறது. அவர்களது சூழ்ச்சி நிச்சயமாக முறியடிக்கப்படும். பாரத பிரதமரின் இன்சூரன்ஸ் பெற்றுத் தருவதாக கூறி விவசாயிகளை அழைத்துச் சென்று உறுப்பினர்களாக்கும் அவல நிலையில்தான் பாஜக உள்ளது. விவசாயிகளிடம் மோதல் போக்கை உருவாக்கும் உள் நோக்கத்தோடு பாஜக அரசியல் செய்து வருகிறது’’ என்றார். துப்புரவு பணியாளர்களுக்கு    சம்பளத்தை உயர்த்த வேண்டும். நத்தத்தில் தமிழ்நாடு கிராம-நகர்ப்புற ஊழியர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.   

Tags : Dindigul Kudakanaru ,