×

சுழற்சி முறையில் பயிரிட்டால் அதிக லாபம் அள்ளுவது உறுதி வேளாண்துறை தகவல்

திண்டுக்கல், அக்.21: ஒரே பயிரை பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவது அதிக லாபத்தை தரும் என தோட்டக்கலைக்கல்லூரி தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளதாவது: பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்து பயிரிடும் முறையாகும். ஒரே பயிரை பயிரிடுவதால் களை செடிகளின் ஆதிக்கம் அதிகமாகும். உழவு முறைகள் களை செடிகள் பரவுதலை இடையூறு செய்து அவற்றை கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு பயிர் சுழற்சி களைகள் கட்டுப்பாட்டை எளிமையாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிடவேண்டும். இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறையே ஆகும். முதல் பருவத்தில் நெல், உளுந்து, அதற்கு அடுத்து பயறு வகைகள் என மாறி மாறி பயிரிடும் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.    

சில பயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை அனைத்தும் உறிஞ்சிவிடுகின்றன. எனவே இந்த பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளை பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம். தானிய பயிர்களுக்கு பிறகு பசுந்தாள் உரத்தாவரங்கள் பயிரிடலாம். நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிருக்கு பின் குறைந்த ஊட்டச்சத்து தேவை மிக்க பயிர்களை பயிரிட்டபின் ஓராண்டு தாவரங்களை பயிர் செய்யலாம். வேளாண் அல்லது காய்கறி பயிர்களுக்கு பின் தீவனப்பயிர்களை பயிரிடலாம். ஒரே பயிரை பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவது அதிக லாபத்தை தரும். அதோடு மண் வளத்தையும் பாதுகாக்க உதவும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...