வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.21: கொரோனா தொற்றில் உயிரிழந்த வருவாய் துறை அலுவலர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கலெக்டர் அலுவலக சங்க நிர்வாகி மோகனன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முருகதாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாக நிவாரணம், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக சரி செய்து, 11 நாட்கள் போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ.5ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தவும், நவம்பர் 25, 26ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: