நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 28 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

ஈரோடு, அக். 21: ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 28 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். ஈரோட்டில் கொரோனா பரவல் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 6 மாதமாக மகப்பேறு அறுவை சிகிச்சைகள் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகமாக கருத்தடை அறுவை சிகிச்சைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் கருத்தடை அறுவை சிகிச்சை துவங்கப்பட்டது. இதில், ஒரே நாளில் லேப்ராஸ்கோப்பிக் முறையில் 28 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், நகர் நல அலுவலர் முரளிசங்கர் ஆகியோர் மருத்துவர்களையும், செவிலியர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.'

Related Stories: