×

புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்தது புதிதாக 108 பேருக்கு தொற்று இதுவரை 28,520 பேர் டிஸ்சார்ஜ்

புதுச்சேரி, அக். 20: புதுவையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 108 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று 2,533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை- 95, காரைக்கால்- 8, ஏனாம்- 4, மாகே- 1 என மொத்தம் 108 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், காந்தி திருநல்லூரை சேர்ந்த 58 வயது பெண் தொற்றால் உயிரிழந்தார். காரைக்கால், மாகே, ஏனாமில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளது.

இறப்பு விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 33,247 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 28,520 பேர் (85.78 சதவீதம்) குணமடைந்துள்ளனர். நேற்று 230 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 2,67,656 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags : Puduvayal ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது