திமுக முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம் திருப்பாலையில் நாளை நடக்கிறது

வாடிப்பட்டி, அக். 20:  மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் திமுக துவக்கப்பட்ட நாள் விழா ஆகிய முப்பெரும் விழாவை மதுரையில் வெகு சிறப்பாக நடத்துவது, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் அக். 23ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் அக். 21ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரி அருகே உள்ள குறிஞ்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: