மாட்டு வண்டி தொழிலாளர்கள் வலியுறுத்தல் மத்திய, மாநில அரசு மருத்துவ படிப்பு ஒதுக்கீட்டுக்கு பிரிலியண்ட் நீட் பயிற்சி மைய மாணவர்கள் 8 பேர் தகுதி ஷீல்டு வழங்கி தாளாளர் கவுரவிப்பு

பட்டுக்கோட்டை, அக். 20: பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாய்ண்ட் நீட் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் திவ்யா, தனுஷ் ஆகியோர் முறையே 588, 587 மதிப்பெண்களை நீட் தேர்வில் பெற்று அகில இந்திய அரசு ஒதுக்கீட்டிலும், விக்னேஷ் மணிகண்டன் ஆகிய மாணவர்கள் முறையே 480, 476 மதிப்பெண்கள் பெற்று மாநில அரசு ஒதுக்கீட்டிலும், மேலும் மாநில அரசு சிறப்பு ஒதுக்கீட்டில் 4 மாணவர்கள் தேர்ச்சி என மொத்தம் 8 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

அகில இந்திய மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றுள்ள 8 மாணவ, மாணவிகளையும் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து ஷீல்டு வழங்கி கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்களாக அதிரை அரசு கால்நடை மருத்துவர் தெய்வவிருதம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல், மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி பங்கேற்று மாணவர்கள் 8 பேரையும் பாராட்டினர். முன்னதாக பள்ளி முதல்வர் ரெஜிஸ்ராஜன் வரவேற்றார். தலைமை ஆசிரியை சான்ட்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் சுப்பையன் செய்திருந்தார்.

Related Stories: