நீட் தேர்வில் தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளி சாதனை

தஞ்சை, அக். 20: தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 2015ம் ஆண்டு முதல் நீட் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்று சாதனை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 2019-20ல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் நடந்த நீட் தேர்வில் தாமரை பன்னாட்டு பள்ளி மாணவர்கள் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர் பரத்குமார் 683 மதிப்பெண் பெற்று டெல்டா மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் பத்மபிரியா 668, நஷீதா 628, நிரஞ்சன் 626, சஞ்சய் 622, ரோஹித் அஸ்வின் 611, நிஷாந்த் 603, கோபிகா பாலச்சந்திரன் 601 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தாமரை கல்வி குழுமத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தாமரை அச்சீவர்ஸ் அகாடமி மூலமாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தருண் 636 மதிப்பெண், கவுரிசங்கர் 619 மதிப்பெண், லேகா லெஷ்மி 610 மதிப்பெண், முகமது சுலைமான் 605 மதிப்பெண், ரித்திகா 605 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பரத்குமார் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் மற்றும் முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். விழாவில் மாணவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் முழு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.

Related Stories: