×

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு

திருப்பூர்,அக்.20: திருப்பூரில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் நீதிமன்றத்திற்கென ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் ரூ. 37 கோடி செலவில் கடந்த 2018 ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அடிக்கல் நடப்பட்டு பணிகள் துவங்கியது. தற்போது மூன்று மாடி கட்டிடத்தில் அனைத்து நீதிமன்றங்களுக்கு தனி கட்டிடம், நீதிபதிகள் அறை, நீதிமன்ற பணிகளுக்கான அறை, உள்ளிட்ட பல அறைகள் தனித்தனியாக கட்டி பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமானப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நீதிபதி அல்லிக்கு உத்தரவிட்டார். மேலும் திருப்பூர் நீதிமன்ற பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags : Chief Justice ,High Court ,
× RELATED ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு...