×

குழந்தை வரம் வேண்டி மடி சாதம் சாப்பிட்ட பெண்கள் புரட்டாசி 5ம் சனி சிறப்பு வழிபாடு கலசபாக்கம் அருகே வேணுகோபால் கோயிலில்

கலசபாக்கம், அக். 18: கலசபாக்கம் அருகே நேற்று குழந்தை வரம் வேண்டி பெண்கள் மடி சாதம் சாப்பிட்டனர்.கலசபாக்கம் அருகே துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவர். முக்கிய நிகழ்ச்சியான மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சி 5வது சனிக்கிழமையில் நடைபெற்று வருகிறது. இதில் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண வயதை கடந்தும் திருமணமாகாதவர்கள் கலந்துகொண்டு மடி சாதம் சாப்பிடுவார்கள்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவர். இவைகளை வைத்து சமையல் செய்து மெகா கொப்பரையில் படையலிட்டு மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற மடி சாதம் சாப்பிடும் நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று மடி சாதம் சாப்பிட்டனர்.கேப்சன்: கலசபாக்கம் அடுத்த நாயுடு மங்கலம் கிராமத்தில் குழந்தை வரம் மற்றும் திருமண வரம் வேண்டி நேற்று மடி சாதம் சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

Tags : women ,Kalasapakkam ,Venugopal Temple ,
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...