நவராத்திரி விழா தொடங்கியது கோயில்கள், வீடுகளில் கொலு வைத்து சிறப்பு பூஜை

சேலம், அக்.18: நவராத்திரி விழா தொடங்கியதையடுத்துஇ சேலத்தில் கோயில், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  இந்துக்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, நேற்று தொடங்கியது. படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளை கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடாகும். நவராத்திரியின் முதல் 3 நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக்காலம். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலமாகும். நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி, நேற்று சுகவனேஸ்வரர் கோயில், வின்சென்ட் எல்லைபிடாரியம்மன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்,

கோட்டை பெருமாள் கோயில், சித்தேஸ்வரர் காளியம்மன் கோயில், அம்மாப்பேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோயில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோயில், பட்டைகோயில் வரதராஜ பெருமாள் கோயில் உள்பட சேலம் மாநகர், மாவட்டத்தில் சிவன், பெருமாள், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் ஒன்பது படிக்கொண்டு விதவிதமான பொம்மைகளை அடுக்கி வைக்கப்பட்டு வழிபாடு தொடங்கியது. முன்னதாக அனைத்து கோயில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. பின்னர் கொலு வைத்து பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். அதேபோல் பெரும்பாலான வீடுகளிலும் நேற்று மாலை நவராத்திரி விழா தொடங்கியது. வீடுகளில் உறவினர்கள், நண்பர்கள் வருகைபுரிந்து நவராத்திரி விழாவை கொண்டாடினர்.

Related Stories:

>