×

ஆயுத பூஜை நெருங்குவதால் பொரி உற்பத்தி பணி மும்முரம்

நாமக்கல், அக்.18: ஆயுதபூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், நாமக்கல்லில் பொரி உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொரி உற்பத்தி நாமக்கல்லில் மும்முரமாக நடந்து வருகிறது. நாமக்கல் ராமவரம்புதூரில் பொரி தயாரிப்பு பட்டறை அமைந்துள்ளது. இங்கு தயாராகும் பொரி, நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கடந்த ஆண்டு போல் இல்லாமல், இந்தாண்டு பொரி உற்பத்தி குறைவாகவே செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடைகள் வைக்க கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால், சில்லறை வியாபாரிகள் குறைவாகவே ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 10 மூட்டைகள் வாங்கிய சில்லறை வியாபாரிகள், இந்த ஆண்டு 5 மூட்டைகள் மட்டுமே ஆர்டர் கொடுத்துள்ளதாக பொரி உற்பத்தியாளர் சண்முகம் தெரிவித்தார்.

Tags : Pori ,Armed Puja ,
× RELATED கார்த்திகை தீபத் திருநாளையொட்டி அவல், பொரி, அகல்விளக்கு விற்பனை அமோகம்