×

பள்ளிபாளையம் நகராட்சிக்கு ₹5 கோடியில் புதிய அலுவலகம்

பள்ளிபாளையம், அக்.18: நாமக்கல் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பள்ளிபாளையம் நகராட்சியில், சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். 21 வார்டுகளை கொண்டுள்ள பள்ளிபாளையம் நகரம், விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இரவு பகலாக இயங்கும் விசைத்தறி கூடங்களில் இருந்து, தினசரி ஒரு டன் அளவிற்கு ஜவுளி கழிவுகள் வெளியேறுகிறது. இதுதவிர குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினம் 15 டன் குப்பைகள் வெளியேறுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப, நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் அதிகம் பணியாற்ற வேண்டி இருப்பதால், தற்போதைய அலுவலகத்தில் போதிய இடமில்லை.

நகராட்சியின் முன்வாசல் மிகவும் குறுகலாக இருப்பதால், பாதையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே,  பள்ளிபாளையம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, புதன்சந்தையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தின் பின்பகுதியில், புதிய நகராட்சி அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது நகரின் மையப்பகுதியாக இருப்பதால், அனைத்து பகுதியில் இருந்தும் வந்து செல்ல எளிதாக இருக்குமென திட்டமிடப்பட்டு, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் நகராட்சி அலுவலகங்களின் முகமை மூலம், புதிய அலுவலகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ₹5 கோடியில் புதிய அலுவலகம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்