×

நாமக்கல்லில் 131 பேருக்கு கொரோனா

நாமக்கல், அக்.18: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நாமக்கல்  மாவட்டத்தில், நேற்று நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், குருசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,973 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் காரணமாக, மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Namakkal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...