×

காரிமங்கலம் அருகே மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

காரிமங்கலம், அக்.18: காரிமங்கலம் பேரூராட்சி முழுவதும், புதிதாக கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி 8வது வார்டு கனரா வங்கியின் பின்புறம் உள்ள மின்கம்பத்தை அகற்றாமலேயே, சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளதால், இந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இடையூறாக இருக்கும் மின்கம்பத்தை சாலையோரமாக அமைக்க கோரி, மின்வாரிய துறையினரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Karimangalam ,
× RELATED அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை