×

மன்னார்குடியில் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

மன்னார்குடி, அக். 18: அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மன்னார்குடியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர அதிமுக சார்பில் 49 வது ஆண்டு துவக்க விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்ஜி குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவா ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொது மக்களுக்கு அதிமுகவினர் இனிப்புகளை வழங்கினர்.

Tags : AIADMK ,Mannargudi ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...