×

மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் காரை திரும்ப தர கோரிய மனு தள்ளுபடி:உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  திருவள்ளூரை சேர்ந்தவர் அன்பரசன். இவர் கடந்த மே மாதம் 16ம் தேதி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மாமாவை அவரது ஊரில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, திருத்தணி அருகே போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் காரில் 22 பிராந்தி குவாட்டர் பாட்டில்களும் 6 பீர் பாட்டில்களும் இருந்தது. காரை பறிமுதல் செய்து அன்பரசனை கைது செய்தனர்.   அவரது கார் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கைதான அன்பரசன் மே 19ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தனது காரை திரும்பத் தருமாறு திருத்தணி போலீசுக்கு அவர் மனு கொடுத்துள்ளார். மனு பரிசீலிக்கப்படவில்லை.  இதையடுத்து, தனது காரை திரும்பத் தருமாறு போலீசுக்கு உத்தரவிடக்கோரி அன்பரசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் மது பாட்டில்களை சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இதிலிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் என்பது நடக்கவில்லை என்றே கருத வேண்டும். மேலும், காரை ஏன் அரசு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு, காரை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும்போது அதை கொண்டுவந்து காட்ட தயாராக இருக்கிறேன் என்று பதில் கொடுத்தேன். எனது மனுவை போலீசார் பரிசீலிக்கவில்லை. எனவே, எனது காரை திரும்பத்தருமாறு திருத்தணி போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஆர்.பி.பிரதாப் சிங் ஆஜராகி, மனுதாரர் கொடுத்த மனு பரிசீலிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் அதைக்கேட்காததால் அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை மதுவிலக்கு பிரிவு கூடுதல் எஸ்.பி நிராகரித்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : High Court ,
× RELATED ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல்...