×

தந்தை, பாட்டியை கொலை செய்த ஆயுள் கைதி மருத்துவமனையில் பலி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்

வேலூர், அக்.16: ஆரணியில் கடந்த 1994ம் ஆண்டு சொத்துக்காக தந்தை, பாட்டியை கொலை செய்த வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த கைதி, மருத்துவமனையில் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் சேகர், இவர் கடந்த 1994ம் ஆண்டு சொத்து பிரச்னைக்காக தந்தை வேல்முருகன், பாட்டி கண்ணம்மாள் ஆகியோரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிந்து சேகரை கடந்த 1996ம் ஆண்டு கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சேகருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 1999ம் ஆண்டு 3 நாள் பரோலில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு காட்பாடி கரசமலங்கலத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருவது சிறை போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சேகரை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேகருக்கு கடந்த 4ம்தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறை மருத்துவர்கள் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென சேகர் மாரடைப்பால் பலியாகியுள்ளார். இதுகுறித்து பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஆரணி தாலுகாவைச் சேர்ந்தவர் சேகர், இவர் தந்தை, பாட்டியை சொத்துக்காக கொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு காசநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்’ என்றனர். திருத்தப்பட்டது.

Tags : victim ,Life Prisoner Hospital ,Vellore Central Jail ,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது