கொரோனா பாதிப்பு காரணமாக 18 பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பு

சேலம், அக்.16: சேலம்  மாவட்டத்தில், கொரோனா தொற்றால் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, நகரப்பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா  பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக, 180க்கும் அதிகமான இடங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக இருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து  சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் இதுவரை, 3.90  லட்சம் பேருக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, ஒரே தெருவில் 5 நபர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 18 பகுதிகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 267 வீடுகளில் 2,051 பேர்  தனிமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக சளி, காய்ச்சல்  உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல்  தெரிவிக்க வேண்டும். இந்த பகுதிகளில் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது,’ என்றனர்.

Related Stories:

>