கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

ஆட்டையாம்பட்டி, அக்.16:ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி அருகேயுள்ள கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதப்பதாக, நேற்று காலை ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் கருப்பு கலர் பேண்டும், வெள்ளை நிற சர்ட்டும் அணிந்திருந்தார். தண்ணீரில் விழுந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருப்பதால், உடல் அழுகியுள்ளது. இதனால், அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இறந்த நபர் யார்? கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>