×

ஓசூரில் ₹92 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

ஓசூர், அக்.16:  ஓசூர் மாநகராட்சியில், அம்ரூத் திட்டத்தின் கீழ் ₹92.21- கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமன் நகரில் ₹1.07 கோடி மதிப்பில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாசேப்பள்ளியில் பழைய குப்பைக்கிடங்கு அருகே ₹1.90 கோடி மதிப்பில் பயோகாஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 நாளைக்கு 10டன் உபயோகமற்ற காய்கறிகள் மூலம், 400 கிலோ பயோகாஸ் தயாரிக்கப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் சேகர், பன்னீர்செல்வம், உதவி பொறியாளர்கள், சுந்தரபாண்டியன், சாந்தி, தமிழரசி, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு