×

ஆன்லைன் மூலம் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க அக்.31 கடைசி நாள்

கிருஷ்ணகிரி, அக்.16: ஓசூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிற்சாலையின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் 2021ம் ஆண்டிற்குள் தொழிற்சாலை சட்டப்படி, தொழிற்சாலைகளின் உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் http://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து புதுப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பம் தயாரித்து ஆன்லைன் வாயிலாக உரிம கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நவம்பர் 30ம் தேதி வரை 10 சதவீதமும், டிசம்பர் மாதம் வரை 20 சதவீதமும், அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 30 சதவீத தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.

தொழிற்சாலையின் தகவல்களை இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாத நிறுவனங்கள் http://dish.tn.gov.in/DISHMIG என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர் சட்ட பதிவு சான்றுகளுக்கு வரைபட ஒப்புதல்களும், ஆண்டறிக்கைகளும் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், சீதாராம் நகர், கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு, ஓசூர் என்ற முகவரியிலும், 04344-297080 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது