×

புளியங்குடி டி.என்.புதுக்குடியில் 25ம்தேதி இந்து நாடார் உறவின் முறை பள்ளி கல்வி கமிட்டி பொதுக்குழு கூட்டம்

புளியங்குடி, அக். 2: புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின் முறை பள்ளி கல்வி கமிட்டி (129/1997) பொதுக்குழு கூட்டம் வருகிற 25ம்தேதி (ஞாயிறு) மாலை 6 மணிக்கு டி.என்.புதுக்குடி கமிட்டி அலுவலகம் அம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல், ஆண்டு வரவு, செலவு வாசித்தல், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்குதல், ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க உதவி செய்தல் போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முககவசம், சமுக இடைவெளியை கடைபிடித்து கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Hindu Nadar Relationship School Education Committee General Body Meeting ,Puliyangudi DN Pudukkudi ,
× RELATED நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.5க்கு நிர்ணயம்