×

சேர்ந்தமரம் அருகே செல்போன் டவரில் ஏறிய மனநிலை பாதித்த வாலிபர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சுரண்டை, அக். 2: சேர்ந்தமரம் அருகே செல்போன் டவரில் ஏறிய மனநிலை பாதித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சேர்ந்தமரம் அருகேயுள்ள கள்ளம்புளியைச் சேர்ந்த மாடசாமி மகன் அருணாசலசாமி (26). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் இவர், நேற்று காலை வீட்டு அருகில் உள்ள சுமார் 40 அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவரில் ஏறினார். பின்னர் அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாக கூறி சத்தம் போட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் பதறி துடித்தனர். இதுகுறித்து சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கும், சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் வீரர்கள் ரவீந்திரன், சாமி, ராஜேந்திரன், திலகர், உலகநாதன், பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அருணாசலசாமியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர் மேலே ஏறி, பத்திரமாக அவரை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

Tags : cell phone tower ,firefighters ,Chernthamaram ,
× RELATED செல்போன் டவரில் ஏறி வாலிபர் திடீர் மிரட்டல்