×

நாங்குநேரி பகுதியில் மினி பஸ்சில் கூடுதல் கட்டணம் இரட்டிப்பாக வசூல் செய்வதாக புகார்

ெநல்லை, அக். 2: நாங்குநேரி பகுதியில் மினிபஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரிக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களில் வழித்தடத்திற்கு ஏற்ப ரூ.8, ரூ.10, ரூ.12 என டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் தடை காரணமாக தனியார் பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயங்கவில்லை. இந்நிலையில் மினி பஸ் ஒன்றில் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்ல ரூ.20 கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கேட்டால் சரியான பதில் இல்லை என கூறுகின்றனர்.

13 கிலோ மீட்டர் ெதாலைவில் உள்ள இந்த வழித்தடத்தில் தனியார் பஸ்களுக்கு நியமித்த கட்டணத் தொகையைவிட கூடுதலாக மினிபஸ்சில் வசூலிப்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வட்டார போக்குவரத்து அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : area ,Nanguneri ,
× RELATED கம்பத்தோடு பஸ் இயக்கம் ‘கட்’...