×

இடையன்குடியில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை

திசையன்விளை, அக்.2 இடையன்குடியில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மண்டல பொறுப்பாளர் முன்னாள் ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் அனிதா பிரின்ஸ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். ராதாபுரம் ஒன்றிய ஆன்லைன் பொறுப்பாளர்கள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் முருகன், ஜாண்ரபீந்தர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெயசங்கர், நகர இளைஞரணி செயலாளர் நெல்சன், ஒன்றிய பிரதிநிதி நசுருதீன், மாணவரணி விஜயகுமார், கண்ணன், முன்னாள் தொழிற்சங்க தலைவர் தனராஜ், உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமைச்சியார், பெட்டைக்குளம் ஞானராஜ், ராமன்குடி சுதாகர், சிவசந்திரன், நிதிஷ், விக்னேஷ், ரிஷிதரன், தலைவன்விளை அரிகிருஷ்ணன், சசிவேல்குமார், லிங்கதுரை உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இடையன்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜேகர் செய்திருந்தார்.

Tags : DMK ,
× RELATED மேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை