×

நீடாமங்கலம் அருகில் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் முளைத்து வீணானது

நீடாமங்கலம், அக்.2: நீடாமங்கலம் அருகில் பருத்திக்கோட்டை, வடகார வயலில் நெல் கொள்முதல் செய்யாதால் நெல்மணிகள் முளைத்து வீணானது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறுவை அறுவடை செய்து 10 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மழையில் நனைந்து முளைப்பு வந்துள்ள நெல் மணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கலியபெருமாள், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் பூசாந்திரம் ஆகியோர் பார்வையிட்டு பாதிப்படைந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது பூசாந்திரம் கூறுகையில், நீடாமங்கலம் பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டபோது பருத்திக்கோட்டை, தென்கரைவாயல், கானூர், வடகரவாயல், ராயபுரம், பூவனூர் உள்ளிட்ட பகுதிகளை கடந்த 24ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் நிலையங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகள் “மழையில் நனைந்து ஈரப்பதத்தில் பல இடங்களில் முளைத்து விட்டதை நினைத்து விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளை பாதுகாத்து அவர்களின் நெல்களை கொள்முதல் செய்து நிவாரணம் வழங்க வேண்டும். விரைவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி முளைத்த நெல் மூட்டைகளுடன் மிகப்பெரிய சாலைமறியல் செய்யப்படும் என்றார்.

Tags : Needamangalam ,purchase station ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...