×

விவசாயிகள் கவலை திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் ஊட்டச்சத்து வாரவிழா நிறைவு

திருத்துறைப்பூண்டி, அக்.2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அனைவருக்கும் ஊட்டச்சத்து போஷான்மா திட்டத்தின்கீழ் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அனைத்து அங்கன்வாடிகளிலும் ஊட்டசத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோர்களுக்கு ஊட்டசத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் தானியங்கள், கீரைகள், பருப்புவகைகள் மற்றும் பேரீட்சை, கடலை மிட்டாய், கருப்பட்டி போன்றவை கணகாட்சி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான நிறைவுவிழா கொக்காலடி அங்கன்வாடி மையத்தில் வட்டார திட்ட அலுவலர் கண்ணகி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இதில் வில்லுபாட்டின் மூலம் பாடல்பாடி விழிப்புணர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் தனலெட்சுமி, நாகலெட்சுமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : area ,Farmers Concern Nutrition Week ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு...