வரதட்சணை கொடுமை கணவர் அதிரடி கைது

திண்டிவனம், அக். 1: திண்டிவனம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் குப்புசாமி மகன் அருண்குமார்(32). இவர் சிங்கப்பெருமாள் கோயில் அருகே தனியார் கம்பெனியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவர் பணிபுரியும் கம்பெனியில் வேலை செய்து வந்த சரிதா(35), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரிதாவிற்கு திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில் அருண்குமாரை 2019 ஜூலை 4ம் தேதி மயிலம் முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு மரக்காணம் ரோடு மகாத்மா காந்தி நகரில் குடியிருந்து வந்துள்ளனர்.இந்நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கணவர் அருண்குமார், மாமனார் குப்புசாமி, மாமியார் செல்வி ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரிதா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மூன்று பேர் மீதும் ஆய்வாளர் லதா வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குப்புசாமி, செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>