×

வடகரையில் ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்

தென்காசி, அக். 1:  வடகரையில் ‘‘எல்லோரும் நம்முடன்’’ ஆன்லைன் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்ம நாதன் தலைமை வகித்து புதிய உறுப்பினர்களுக்கு அட்டையை வழங்கி பேசினார்.  மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சுதன் ராஜா, பேரூர் செயலாளர் முகம்மது உசேன், பொருளாளர் அருணாசலம், மாவட்ட பிரதிநிதி சாகுல்ஹமீது, நூர்முகமது, முகமது இஸ்மாயில், அஜீஸ் என்ற முத்து மீரான், திருமலை, பாண்டி, சேக் தாவூது, வார்டு செயலாளர்கள் முகமது உசேன், சாகுல்ஹமீது, முருகையா, சுரேஷ், ரகுமத்துல்லா, கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sivapathmanathan ,DMK ,North ,
× RELATED மேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை