×

வி.கே.புரம் அம்பலவாணபுரத்தில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

வி.கே.புரம். அக். 1.  வி.கே.புரம் அம்பலவாணபுரம் மெயின் ரோட்டில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது. அம்பை ஒன்றியத்திற்குட்பட்ட அடையக்கருங்குளம் ஊராட்சியில், 100க்கும் மேற்பட்ட வீட்டு குடிநீர் இணைப்புகளும், பொது இணைப்புகளும் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளுக்கு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து வி.கே.புரம் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் அடையகருங்குளத்திற்கு செல்லும் குடிநீர் குழாய், வி.கே.புரம் அம்பலவாணபுரம் மெயின் ரோட்டில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பால் வெளியேறும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குழாய் உடைப்பை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pipe break ,
× RELATED அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர்...