வேலூர் மாநகராட்சி பகுதியில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர், அக்.1: வேலூர் மாநகராட்சி பகுதியில் 63 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சங்கரன்பாளையத்தில் 22 வயது பெண், சத்துவாச்சாரியில் 30 வயது ஆண், 29 வயது பெண், பழைய காட்பாடி 60 வயது முதியவர், காட்பாடியில் 17 வயது சிறுவன், 3 வயது சிறுவன் வெளிமாநிலங்களை சேர்ந்த 5 பேர் உட்பட 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வளாக சிறப்பு சிகிச்சை மையம், வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் நேற்று 37 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

Related Stories:

>