×

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

வேலூர், அக்.1: பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், குடியாத்தம் பகுதியில் எஸ்பி செல்வகுமார் உத்தரவின்பேரில், குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் மேற்பார்வையில், குடியாத்தம் காவல் சப்-ஸ்டேஷனுக்கு உட்பட்ட குடியாத்தம் தாலுகா, டவுன், மேல்பட்டி, பரதராமி, பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோயில், மசூதி, பஸ் நிலையம், ரயில் நிலையம் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காவலர், ஆயுதப்படை போலீசார், தனிப்பிரிவு போலீசார் உளவுத்துறை என 300க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் ஆகிய கோயில்களில் போலீசார் பாதுகபாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Babri Masjid ,
× RELATED பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு...