×

தனியார் மயமாக்க எதிர்ப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, அக்.1: மின் வாரியத்தை தனியார் மயமாக்க முயற்சிப்பதை கண்டித்து மன்னார்குடியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் வாரியங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடி யாக கைவிட வேண்டும், தனியார் மயமாக்கலை கண்டித்து உத்திரபிரதேசத்தில் போரட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் மன்னார்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, தொமுச கோட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மின்வாரிய பட்டய பொறியாளர்கள் சம்மேளனத்தின் தென் மண்டல தலைவர் சம்பத், சம்மேளன திட்ட செயல் தலைவர் ராஜகோபால், கோட்ட செயலாளர் ஜெயபால், மத்திய அமைப்பின் கோட்ட செயலாளர் வீரபாண்டியன், ஐக்கிய சங்க பிரதிநிதி முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மின்வாரிய ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags :
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்