×

சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவ் நினைவு தினம்

திருத்துறைப்பூண்டி, அக்.1: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவ் நினைவு மண்டபத்தில் 59வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் ஆர்டிஓ புண்ணியக்கோட்டி, தாசில்தார் ஜெகதீசன், நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாகை எம்பி செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோரும் சீனிவாசராவ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஆடலரசன், திமுக நகர செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Independence Day Martyr Siniwasarao Memorial Day ,