×

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.1: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். தொமுச அறந்தாங்கி கிளைச் செயலாளர் யோகராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு தலைவர் கோபாலன், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கத்தின் சிவக்குமார், தொமுச மத்திய சங்க துணைத் தலைவர் நெடுஞ்செழியன், தொமுச மத்திய சங்க இணை செயலாளர் சுந்தரம், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொமுச பொருளாளர் பாலுக்கண்ணு நன்றி கூறினார்.

புதுக்கோட்டை: போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகி முகமதலி ஜின்னா மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : Transport Corporation ,
× RELATED அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்