×

புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

புதுக்கோட்டை, அக்.1: புதுக்கோட்டை போஸ் நகர் நான்காம் வீதியை சேர்ந்தவர் தவமணி (60). வீட்டு வேலை செய்யும் பெண்ணான இவர் வடக்கு மூன்றாம் விதியில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்லும் போது அந்தப் பகுதியில் உள்ள எர்த் கம்பியில் கை உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.  உடனே அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே தவமணி உயிரிழந்தார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை சிவபுரத்தில் ஓய்வுபெற்ற...